2005 தமிழ்ப் புது வருட விழா | Tamil New Year Celebration

Dr. M. Subbuswamy's Residence | Sat, April 16, 2005, 5:00 PM | Tallahassee, FL, USA.

2005 தமிழ்ப் புது வருடப் பிறப்பிற்காக நடத்திய விழாவில் திருமதி உஷா தமிழ் சொல்லிக் கொடுத்த குழந்தைகள் ஒப்பிவித்த பாடல்கள் மூன்று. Prof Usha Chandra taught Tamil to children of Tallahassee and the kids performed the following Tamil songs they learned in the class for the 2005 Tamil New Year Celebration.

 

குழந்தைகள்:
அ. ஐங்கார் | இரா. வாசுதேவன் | அ. ஹரிஷ் | விவேக் தாயுமானம் சோமசுந்தரம் |

நாய்க் குட்டி

தோ தோ நாய்க் குட்டி   துள்ளி வா நாய்க் குட்டி
வெள்ளை நிற நாய்க் குட்டி   வீரமான நாய்க் குட்டி
எலியைப் பிடிக்க ஓடும்   புலியைப் போலப் பாயும்
திருடன் வந்தால் குரைக்கும்   லொள் லொள் லொள்
வாலை வாலை ஆட்டும்   பாலைப் பாலைக் குடிக்கும்
நன்றி யுள்ள நாய்க் குட்டி   நான் வளர்க்கும் நாய்க் குட்டி

நிலா நிலா

நிலா நிலா ஓடி வா   நில்லாமல் ஓடி வா
மலை மீது ஏறி வா   மல்லிகைப் பூ கொண்டு வா
வட்ட வட்ட நிலவே   வண்ண முகில்ப் பூவே
பட்டம் போல பறந்து வா   பம்பரம் போல் சுற்றி வா

காக்கா

காக்கா கண்ணுக்கு மை கொண்டு வா   குருவி கொண்டைக்கு பூ கொண்டு வா
கிளீயே குழந்தைக்கு பழம் கொண்டு வா   பசுவே குழந்தைக்கு பால் கொண்டு வா

மற்ற பக்கங்கள்

மேலும் > >

வடிவமும் உரிமையும் © 2008-09 தாயுமானசாமி சோமசுந்தரம்.