சோமசுந்தரம் குடும்பமும் தலகாசி தமிழ்ச் சங்கமும் [English Version]

வணக்கம். தாயுமானசாமி சோமசுந்தரம் தமிழ் தளம் உங்களை வரவேற்கிறது. நாங்கள் பிறந்து வளர்ந்தது தமிழ் நாடு. ஆனால் தற்போது வாழ்வது தலகாசி. நாங்கள் தலகாசியின் சர்வதேச, ஆசிய, இந்திய, தமிழ் சமூகங்களின் மேன்பாட்டுக்கு உதவி செய்கிறோம். இந்த இடத்தில் இருக்கும் விபரங்கள் எங்களது தமிழ் சங்க ஈடுபாடு பற்றி தெரிவிக்கும். நன்றி.

வருடம் 2000-த்தை தலகாசி தமிழ்ச் சங்கத்தின் ஆரம்பமாகக் கருதலாம். அந்த வருடம் திருமதி மற்றும் திரு முத்துசுவாமி அவர்களும், பானுவும், நானும் தலகாசியில் வாழும் தமிழ் நண்பர்களையும் அவர்களின் குடும்பத்தோரையும் ஒன்றாக் கூட்டினோம். அன்று மாலை நேரத்தில் இந்தியா, மலேசியா, சிங்கபூர், மற்றும் இலங்கை தமிழ் நண்பர்கள் பலர் திரு முத்துசுவாமி அவர்களின் இல்லத்துக்கு வந்து இருந்தனர். அப்போழுது திரு முத்துசுவாமி அவர்கள் ஏல்லோரிடமும் ஒரு விண்ணப்பம் அளித்தார். அதன் படி பானுவும் நானும் தலகாசி தமிழ்ச் சங்கம் ஆரம்பிக்க தேவையான வேலைகளைத் தொடங்கினோம்.

கடந்த பல வருடங்களாக தலகாசி தமிழ் சங்கத்தின் மூலமாக பல கலை நிகழ்ச்சிகளை நாங்கள் நடத்தி வந்துள்ளோம். இந்த நிகழ்ச்சிகளில் சிறுவர்கள், சிறுமிகள், மற்றும் பெரியவ‌ர்கள் பங்கு கொண்டு இருக்கிறார்கள். தமிழ் கற்றுக் கொண்ட சிறுவர்களும் மற்றும் சிறுமிகளும் தலகாசி இந்திய சங்கத்தின் (India Association of Tallahassee | IATLH நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டுள்ளார்கள். இதுவரை தமிழ் கற்று கொண்ட தலகாசி சிறுவர்களும் மற்றும் சிறுமிகளும் ஆத்திசூடி, தமிழில் கதை சொல்லுதல், மகா கவி பாரதியாரின் "ஒளி படைத்த கண்ணினாய் வா! வா!" பாட்டு, "போலிக்கு தண்டனை" நாடகம், "தெனாலி இராமன்" நாடகம், மற்றும் பல நிகழ்ச்சிகளில் பங்கெற்றுள்ளுனர்.

கடந்த சில வருடங்களாகவே (2007 முதல்) தமிழ் விழாவில் பங்கு கொள்ளுவர்களின் எண்ணிக்கை அதிரிக்கவே, இப்போது தமிழ் விழாவைப் பொது இடத்தில் நடத்தி வருகிறோம். 2009 தமிழ் வருடப் பிறப்பு விழாவில் நல்ல நண்பர்கள் என்ற நாடகமும், 2010 த்தில் மாணிக்கம் மாட்டினான் என்னும் நாடகமும், 2011 ல் தில்லுமுல்லு திருமணம் என்னும் நாடகமும் போட்டோம்.

மேலும் > >

வடிவமும் உரிமையும் © 2008-21 தாயுமானசாமி சோமசுந்தரம்.