சோமசுந்தரம் குடும்பமும் தலகாசி தமிழ்ச் சங்கமும் [English Version]

வாரம் ஒரு தேவாரம்

http://tamil.somasundaram.us

திருச்சிற்றம்பலம்

தலம்: பொது
பாடியவர்: திருஞான‌சம்பந்தர்
திருமுறை: 3; பதிகம்: 49; பாடல்: 01

காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி
ஓது வார்தமை நன்னெறிக்கு உய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது
நாதன் நாமம் நமச்சிவாயவே

உரை: பக்தியினால் மனம் கசிந்து கண்ணீர் பெருகி வரத் தன்னைப் போற்றும் அடியாரை நல்ல நெறிக்கு வழி காட்டுவதும், நான்கு வேதங்களின் உண்மைப் பெருளாகவும் விளங்குவதும் இறைவனின் திருநாமமாகிய நமச்சிவாய என்பதே.

Meaning:
When the devotees praise the Lord with great devotion with tears rolling down their cheeks he alone shows them the correct path. He who is the inner meaning of all the four Vedas and "NaMaChiVaYaa" is His name.

திருச்சிற்றம்பலம்

வேதாரண்யம் தாயுமானசாமி சோமசுந்தரம்
தலகாசி, ப்லாரிடா, அ.ஐ.நா.
திங்கள் கிழமை, பிப்ரவரி 09, 2009.


திருஞானசம்பந்தரின் பொது தேவாரம் [Narration in .mp3]


வடிவமும் உரிமையும் © 2008-09 தாயுமானசாமி சோமசுந்தரம்.