Main | About us | Links | Events | Tamil Sangam | Contact

 

Tamil Unicode Links

அமெரிக்காவின் தலகாசி நகரில் பொங்கல் கொண்டாட்டம்

 

ஞானபானு & தாயுமானசாமி சோமசுந்தரம்

சனிக்கிழமை, சனவரி 17, 2009

தலகாசி, புலாரிடா, அமெரிக்கா.

 

 

தலகாசி (Tallahassee), புலாரிடா (Florida) அமெரிக்காவில் உள்ள ஒரு சிறு நகரம். புலாரிடாவின் தலைநகரம், இரண்டு பல்கலைக்கழகங்களும், சட்ட சபையும், ஆளுனர் அலுவலகம் உள்ள நகரம். இந்த ஊரில் கிட்ட தட்ட 50-60 தமிழ் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. சிலர் தலகாசியில் 30 வருடங்களுக்கு மேலாகவே வாழ்ந்து வருகின்றனர். சிலர் புதியவர்கள். பெரும்பான்மையோர் 20 வருடமாக வாழ்ந்து வருகின்றனர். இப்படி பட்ட தலகாசி தமிழர்கள் திருமதி மற்றும் திரு முத்துசுவாமி அவர்களும் திருமதி பானு மற்றும் திரு சோமசுந்தரமும் தலகாசி தமிழ்ச் சங்கத்தை கி.பி. 2000ல் ஆரம்பித்தார்கள். அந்த வருடம் தலகாசியில் வாழும் தமிழ் நண்பர்களையும் அவர்களின் குடும்பத்தோரையும் ஒன்றாக் கூட்டினோம். அன்று மாலை நேரத்தில் இந்தியா, மலேசியா, சிங்கபூர், மற்றும் இலங்கை தமிழ் நண்பர்கள் பலர் திரு முத்துசுவாமி அவர்களின் இல்லத்துக்கு வந்து இருந்தனர். அப்போழுது திரு முத்துசுவாமி அவர்கள் ஏல்லோரிடமும் ஒரு விண்ணப்பம் அளித்தார். அதன் படி பானு மற்றும் சோமசுந்தரம் தலகாசி தமிழ்ச் சங்கம் ஆரம்பிக்க தேவையான வேலைகளைத் தொடங்கினார்கள்.

 

கி.பி. 2000‍ முதல் 2003 வரை எங்கள் கூட்டங்கள் பொதுவாக தமிழ் நண்பர்களையும் அவர்களின் குடும்பத்தோரையும் பார்த்து பேசுவதும், பழகுவதும், உணவு அருந்துவதுமாக இருந்து வந்தது. அற்சமயம் திருமதி உஷா சந்திரா மற்றும் திரு நமா சந்திரா அவர்களும் (கல்லூரி ஆசிரியர்கள்) தலகாசியில் வாழும் தமிழ் குழந்தைகளுக்கு தமிழ்ப் பாடம் சொல்லி தர ஆசைப் பட்டார்கள். அதை அடுத்து வரும் தமிழ் வருடப்பிறப்பிற்கு அனைவரும் தமிழ் நிகழ்ச்சிகள் செய்ய வேண்டும் என்று பிரியப்பட்டார்கள். கி.பி. 2004 சனவரி மாதத்தில் திருமதி உஷா அவர்கள் 5-தலகாசி வாழ் குழந்தைகளுக்கு தமிழ்ப் பாடம் சொல்லித் தர ஆரம்பித்தார்கள். ஒவ்வோரு ஞாயிற்று கிழமையும் மணி 3 முதல் 4 வரை அவர்கள் தமிழை எழுதவும், படிக்கவும், பேசவும், மற்றும் உச்சரிக்கவும் சொல்லிக் கொடுத்தார்கள். குழந்தைகளுக்கு வாரா வாரம் வீட்டுப் பாடமும் கொடுத்து பெற்றொர்களை உதவி செய்யச் சொன்னார்கள். குழந்தைகளும் பெற்றொர்களும் வாரா வாரம் பாடம் படித்தார்கள். தமிழ்ப் பள்ளி 2006 வரை நல்ல முறையில் நடந்தது. 2006-ல் திருமதி உஷா சந்திரா மற்றும் திரு நமா சந்திரா அவர்களும் வேறு ஒரு ஊருக்கு மாறிப் போகவே தமிழ்ப் பள்ளி முடிவுற்றது. ஆனால் அவர்கள் சொல்லிக் கொடுத்த பாடங்களை மறக்கவில்லை.

 

கடந்த பல வருடங்களாக தலகாசி தமிழ்ச் சங்கத்தின் மூலமாக பல கலை நிகழ்ச்சிகளை நாங்கள் நடத்தி வந்துள்ளோம். இந்த நிகழ்ச்சிகளில் சிறுவர்கள், சிறுமிகள், மற்றும் பெரியவ‌ர்கள் (ஆண்கள் மற்றும் பெண்கள்) பங்கு கொண்டு இருக்கிறார்கள். தமிழ் கற்றுக் கொண்ட சிறுவர்களும் மற்றும் சிறுமிகளும் தலகாசி இந்திய சங்கத்தின் (India Association of Tallahassee | Glimpses of India Program) நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டுள்ளார்கள். இதுவரை தமிழ் கற்று கொண்ட தலகாசி சிறுவர்களும் மற்றும் சிறுமிகளும் ஆத்திசூடி, தமிழில் கதை சொல்லுதல், மகா கவி பாரதியாரின் "ஒளி படைத்த கண்ணிணாய் வா! வா!" பாட்டு, "போலிக்கு தண்டனை" நாடகம், "தெனாலி இராமன்" நாடகம், மற்றும் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளுனர். கடந்த சில வருடங்களாகவே (2007 முதல்) தமிழ் விழாவில் பங்கு கொள்ளுபவர்களின் எண்ணிக்கை அதிரிக்கவே, இப்போது தமிழ் விழாவைப் பொது இடத்தில் நடத்தி வருகிறோம்.

 

இந்த வருடம் தலகாசியில் வாழும் தமிழன்பர்கள் வழக்கம் போல பொங்கல் பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர். இந்த வருடத்தின் சிறப்பு நிகழ்ச்சியாக, வண்ணக் கோல போட்டி நடந்தது. இதில் பெண்களும் சிறுமியர்களும் கலந்து கொண்டனர். தற்போது இங்கே குளிர்காலம் என்பதால் (தண்ணீர் உறைந்து பனிக்கட்டியாகும் அளவுக்கு -5 deg C ), வெளியில் கோலம் போட முடியாத ஒரு நிலைமை. இருப்பினும் நாங்கள், நம் கலாச்சாரத்தை விடக்கூடாது என்று கருதி, கோல போட்டியை இடம் மாற்றி உள் அறைக்குள் நடத்தினோம் (படம் காண்க) - கருப்பு நிற மேஜை விரிப்பின் மேல் கோலமிட்டு அதன் மேல் வண்ணப்பொடி தூவி அழகு செய்தோம். இந்த முதல் அனுபவம் சிறப்பாக நடந்ததால், இந்த கருத்தை தினமலர் வாசகர்களுடன் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறோம். கோலப் போட்டி நடந்து முடியவும், இனிப்பு பொங்கல் தயாராகவும் தருணம் சரியாக இருக்கவே, அனைவரும் கோலங்களை பாராட்டிய படியே பொங்கலையும் ருசித்தனர்.

 

அமெரிக்காவில் வாழும் தலகாசி தமிழர்கள் அன்பர்களின் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

 

திருமதி மணிபிரியா, பானு, சசிகலா கோலம் போடுகிறார்கள்.

மயில் கோலம் புள்ளிக் கோலம்

கோலப் போட்டி

பொங்கல் கோலம்

 

 

ஞானபானு சோமசுந்தரம் | தாயுமானசாமி சோமசுந்தரம்

சனிக்கிழமை, சனவரி 17, 2009

தலகாசி, புலாரிடா, அமெரிக்கா.

Contents © 2008-09 Thayumanasamy Somasundaram.
tamil.somasundaram.us/ta-unicode.html | Last Updated: