சோமசுந்தரம் குடும்பமும் தலகாசி தமிழ்ச் சங்கமும் [English Version]

வாரம் ஒரு தேவாரம்

http://tamil.somasundaram.us

திருச்சிற்றம்பலம்

தலம்: திருமறைக்காடு (வேதாரண்யம்)
பாடியவர்: திருஞான‌சம்பந்தர்
திருமுறை: 2; பதிகம்: 37; பாடல்: 01

சதுரம் மறைதான் துதிசெய்து வணங்கும்
மதுரம் பொழில்சூழ் மறைக்காட் டுறைமைந்தா
இதுநன் கிறைவைத் தருள்செய்க எனக்குன்
கதவந் திருக்காப்புக் கொள்ளுங் கருத்தாலே.

உரை: நான்கு வேதங்களும் (மறைகளும்) துதித்து வணங்கும், இனிய பொழில்கள் சூழ்ந்திருக்கும் திருமறைக் காட்டில் உறையும் மைந்தனே! நீ எனக்கு அருள் செய்து விடை சொல்வாயோ! கோவில் கதவுகளை முன் போல திருக்காப்புக் கொள்ளும் படி செய் (மூடு).

Meaning:
Young Lord who resides in Thirumaraikkadu (Vedaraniam) surrounded by plants with sweetness! Please have grace on me and answer my question. Please close the doors of your temple as it was before.

திருச்சிற்றம்பலம்

வேதாரண்யம் தாயுமானசாமி சோமசுந்தரம்
தலகாசி, ப்லாரிடா, அ.ஐ.நா.
திங்கள் கிழமை, ஜனவரி 05, 2009.


திருஞானசம்பந்தரின் வேதாரண்யம் தேவாரம் [Narration in .mp3]


வடிவமும் உரிமையும் © 2008-09 தாயுமானசாமி சோமசுந்தரம்.