சோமசுந்தரம் குடும்பமும் தலகாசி தமிழ்ச் சங்கமும் [English Version]

வாரம் ஒரு தேவாரம்

http://tamil.somasundaram.us

தலம்: திருமறைக்காடு (வேதாரண்யம்)
பாடல்: தேவாரம்
பாடியவர்: திருநாவுக்கரசர்
பயன்: வேண்டியது கிடைக்கும்
திருமுறை: 5; பதிகம்: 10; பாடல்: 01

பண்ணின் நேர்மொழியாள் உமைபங்கரோ
மண்ணினார் வலம் செய் மறைக் காடரோ
கண்ணினால் உமைக் காணக் கதவினைத்
திண்ணமாகத் திறந்தருள் செய்ம்மினே.

உரை: பண்ணைப் (இசையைப்) போன்ற சொற்களை (பேச்சை) உடைய உமையாளை (பார்வதியை) ஒருபாகமாகக் கொண்டவருமானரே, மண் உலகில் உள்ளவர்கள் அனைவரும் வலமாக வந்து வழி படுபவருமானரே, திருமறைக் காட்டில் உள்ள பெருமானே. உம்மை என் கண்களினால் காணுமாறு கோவில் கதவுகளை திண்ணமாகத் (உறுதியாகத்) திறந்து அருள் செய்ய வேண்டும்.

Meaning:
O Lord! thou are the one who shares the better half with Goddess Uma who has voice that is as sweet as a song. You are the one who is being worshipped by those who live in the wide Earth. O Lord! who resides in Vedaraniam, I want you to open the doors of the temple so that I can see you with my own eyes and get blessed.

வேதாரண்யம் தாயுமானசாமி சோமசுந்தரம்
தலகாசி, ப்லாரிடா, அ.ஐ.நா.
திங்கள் கிழமை, டிசம்பர் 8, 2008.


திருநாவுக்கரசரின் வேதாரண்யம் தேவாரம் [Narration in .mp3]


வடிவமும் உரிமையும் © 2008 தாயுமானசாமி சோமசுந்தரம்.