சோமசுந்தரம் குடும்பமும் தலகாசி தமிழ்ச் சங்கமும் [English Version]

வாரம் ஒரு தேவாரம்

http://tamil.somasundaram.us

திருச்சிற்றம்பலம்

தலம்: திருமறைக்காடு (வேதாரண்யம்)
பாடியவர்: திருநாவுக்கரசர்
பயன்: வேண்டியது கிடைக்கும்
திருமுறை: 6; பதிகம்: 23; பாடல்: 01

தூண்டு சுடரனைய சோதி கண்டாய்
தொல்லமரர் சூளாமணிதான் கண்டாய்
காண்டற் அரிய கடவுள் கண்டாய்
கருதுவார்க் ஆற்ற எளியான் கண்டாய்
வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்
மெய்ந்நெறி கண்டாய் விரதம் எல்லாம்
மாண்ட மனத்தார் மனத்தான் கண்டாய்
மறைக்காட்டு உறையும் மணாளன் தானே.

உரை: நீ எம் மனத்தில் தூண்டிய சுடரைப் போல் இருப்பவன், பழைமையான தேவர்களுக்கு சூளாமணி நீ உன் அன்பர்களைத் தவிற பிறரால் காண்பதற்கு அரியவன், உன் மெய்யன்பர்களுக்கு மிக எளிதாகக் காட்சி கொடுப்பவன், உன்னை வேண்டுவோர்க்கு வேண்டுவதை கொடுப்பவன் நீ, மெய்ப்பொருளை உணர்த்துவன் நீ நோன்புகளை மனத்தில் கொள்பவர்கள் உள்ளத்தில் இருப்பவன் நீ, எம் பெருமானே! திருமறைக்காட்டில் (வேதாரண்யத்தில்) உறையும் மணாளனே!

Meaning:
O Lord! thou are the one who resides in my heart as a lit lamp, you are the epitome of devas, you are the one who can't be seen by non-devotees, while easily appearing in front of those who worship you. You provide everything your devotees want, you are the meaning of the Truth, you reside in hearts of the pious ones. O Lord! you are the one who resides as a bride-groom in Vedaraniam.

திருச்சிற்றம்பலம்

வேதாரண்யம் தாயுமானசாமி சோமசுந்தரம்
தலகாசி, ப்லாரிடா, அ.ஐ.நா.
திங்கள் கிழமை, டிசம்பர் 29, 2008.


திருநாவுக்கரசரின் வேதாரண்யம் தேவாரம் [Narration in .mp3]


வடிவமும் உரிமையும் © 2008 தாயுமானசாமி சோமசுந்தரம்.