சோமசுந்தரம் குடும்பமும் தலகாசி தமிழ்ச் சங்கமும் [English Version]

வாரம் ஒரு தேவாரம்

http://tamil.somasundaram.us

திருச்சிற்றம்பலம்

தலம்: திருமறைக்காடு (வேதாரண்யம்)
பாடியவர்: திருஞான‌சம்பந்தர்
திருமுறை: 2; பதிகம்: 37; பாடல்: 05

வானோர் மறை மாதவத்தோர் வழிபட்ட
தேனார் பொழில்சூழ் மறைக்காட்டு உறைசெல்வா
ஏனோர் தொழுது ஏத்த இருந்தநீ யென்கொல்
கானார் கடு வேடுவனான கருத்தே.

உரை: தேவலோகத்தில் இருப்பவர்களும், வேதங்களை படித்தவர்களும் வழிபடுபவனே! தேனுடைய பொழில்கள் சூழ்ந்து இருக்கும் திருமறைக்காட்டில் இருக்கும் செல்வனே! எல்லோராலும் தொழுதப்படுபவனே! நீ காட்டில் இருக்கும் வேடன் போல ஏன் தோன்றுகிறாய்?

Meaning:
O Lord, the one who resides in Vedaraniam that is surrounded by honey-flowered gardens and the one who is worshipped by people in the Heavens and those who learned the Vedas! What is the point that you appear as a hunter in the forest?

திருச்சிற்றம்பலம்

வேதாரண்யம் தாயுமானசாமி சோமசுந்தரம்
தலகாசி, ப்லாரிடா, அ.ஐ.நா.
திங்கள் கிழமை, பிப்ரவரி 02, 2009.


திருஞானசம்பந்தரின் வேதாரண்யம் தேவாரம் [Narration in .mp3]


வடிவமும் உரிமையும் © 2008-09 தாயுமானசாமி சோமசுந்தரம்.