சோமசுந்தரம் குடும்பமும் தலகாசி தமிழ்ச் சங்கமும் [English Version]

வாரம் ஒரு தேவாரம்

http://tamil.somasundaram.us

திருச்சிற்றம்பலம்

தலம்: திருமறைக்காடு (வேதாரண்யம்)
பாடியவர்: திருஞான‌சம்பந்தர்
திருமுறை: 2; பதிகம்: 37; பாடல்: 04

படர்செம் பவளத்தொடு பன்மலர் முத்தம்
மடலம் பொழில்சூழ் மறைக்காட் டுறைமைந்தா
உடலம் முமைபங்க மதாகியு மென்கொல்
கடல்நஞ் சமுதா அதுவுண்ட கருத்தே.

உரை: செம்பவளக் கொடிகள் படர்ந்தும், பல வகையான மலர்களுடனும், முத்துக்களுடனும், பொழில்களுடனும் சூழ்ந்து இருக்கும் திருமறைக்காட்டில் (வேதாரண்யத்தில்) உறையும் மைந்தரே! உம் உடலில் ஒருபாதியாக உமையைக் (பார்வதியைக்) கொண்டவரே, எந்த காரணத்திற்காக கடலில் உண்டான நஞ்சை அமுதம் போல உண்டீர்?

Meaning:
O! Young Lord who resides in Vedaraniam that is surrouned by coral, and a forest that contains creepers, flowers with petals, while you share half of your body with Parvathi, what is the reason behind your drinking the poison as though it was nector that rose from the sea?

திருச்சிற்றம்பலம்

வேதாரண்யம் தாயுமானசாமி சோமசுந்தரம்
தலகாசி, ப்லாரிடா, அ.ஐ.நா.
திங்கள் கிழமை, ஜனவரி 26, 2009.


திருஞானசம்பந்தரின் வேதாரண்யம் தேவாரம் [Narration in .mp3]


வடிவமும் உரிமையும் © 2008-09 தாயுமானசாமி சோமசுந்தரம்.