சோமசுந்தரம் குடும்பமும் தலகாசி தமிழ்ச் சங்கமும் [English Version]

வாரம் ஒரு தேவாரம்

http://tamil.somasundaram.us

திருச்சிற்றம்பலம்

தலம்: திருமறைக்காடு (வேதாரண்யம்)
பாடியவர்: திருஞான‌சம்பந்தர்
திருமுறை: 2; பதிகம்: 37; பாடல்: 03

குரவங் குருக்கத் திகள்புன் னைகண்ஞாழல்
மருவும் பொழில்சூழ் மறைக் காட் டுறைமைந்தா
சிரமும் மலருந் திகழ்செஞ் சடைதன்மேல்
அரவம் மதியோ டடைவித் தலழகே.

உரை: குரா மரம், குருக்கத்தி மரம், புன்னை மரம் மற்றும் கொன்றை மரம் பொன்ற மரங்கள் சூழ்ந்து உள்ள திருமறைக்காட்டில் (வேதாரண்யத்தில்) இருக்கும் மைந்தரே! தலையில் மாலையுடனும், மலருடனும் இருக்கும் உம் செஞ்சடைமேல் பாம்பையும் மதியையும் (சந்திரனையும்) சேர்த்து வைத்திருப்பதற்கு காரணம் என்ன?

Meaning:
The Young Lord who resides in Thirumaraikkadu (Vedaraniam) that is surrounded by a forest that contains kura, kurakathi, punnai, and konrai trees. While wearing flower garlands on your head gear, what is the reason you share your head with moon and snake?

திருச்சிற்றம்பலம்

வேதாரண்யம் தாயுமானசாமி சோமசுந்தரம்
தலகாசி, ப்லாரிடா, அ.ஐ.நா.
திங்கள் கிழமை, ஜனவரி 19, 2009.


திருஞானசம்பந்தரின் வேதாரண்யம் தேவாரம் [Narration in .mp3]


வடிவமும் உரிமையும் © 2008-09 தாயுமானசாமி சோமசுந்தரம்.