சோமசுந்தரம் குடும்பமும் தலகாசி தமிழ்ச் சங்கமும் [English Version]

வாரம் ஒரு தேவாரம்

http://tamil.somasundaram.us

திருச்சிற்றம்பலம்

தலம்: திருமறைக்காடு (வேதாரண்யம்)
பாடியவர்: திருஞான‌சம்பந்தர்
திருமுறை: 2; பதிகம்: 37; பாடல்: 02

சங்கந் தரளம் மவைதான் கரைக்கெற்றும்
வங்கக் கடல்சூழ் மறைக்காட் டுறைமைந்தா
மங்கை உமைபா கமுமா கவிதென்கொல்
கங்கை சடைமே லடைவித்த கருத்தே.

உரை: சங்குகளையும் முத்துக்களையும் அலைகளால் கடற்கரையில் எறியும் படியாக கடல் சூழ்ந்திருக்கும் திருமறைக்காட்டில் உறையும் மைந்தனே! உமா தேவியை ஒருபாகமாக நீ வைத்து இருக்கும் போது கங்கையைச் சடைமீது வைத்து இருப்பதின் காரணம் என்ன?

Meaning:
Young Lord who resides in Thirumaraikkadu (Vedaraniam) that is surrounded by sea that throws conches and pearls over the beaches. While you share half your body with Goddess Uma Devi, what is the reason you share the river Ganges on your head?

திருச்சிற்றம்பலம்

வேதாரண்யம் தாயுமானசாமி சோமசுந்தரம்
தலகாசி, ப்லாரிடா, அ.ஐ.நா.
திங்கள் கிழமை, ஜனவரி 12, 2009.


திருஞானசம்பந்தரின் வேதாரண்யம் தேவாரம் [Narration in .mp3]


வடிவமும் உரிமையும் © 2008-09 தாயுமானசாமி சோமசுந்தரம்.