சோமசுந்தரம் குடும்பமும் தலகாசி தமிழ்ச் சங்கமும் [English Version]

வாரம் ஒரு தேவாரம்

http://tamil.somasundaram.us

தலம்: திருமறைக்காடு (வேதாரண்யம்)
பாடல்: தேவாரம்
பாடியவர்: திருஞான‌சம்பந்தர்
திருமுறை: 1; பதிகம்: 22; பாடல்: 01

சிலைதனை நடுவிடை நிறுவியொர் சினமலி அர‌வது கொடுதிவி
தலமலி சுரரசு ரர்களொலி சலசல கடல்கடை வுழிமிகு
கொலைமலி விடமெழ அவருடல் குலைதர வதுநுகர் பவனெழில்
மலைமலி மதில்புடை தழுவிய மறைவனம் அமர்தரு பரமனே.

உரை: மலையை நடுவே நிறுத்தி கோபமுள்ள‌ பாம்பைக் கயிறாகக்கொண்டு விண்ணுலகில் வாழும் தேவர்களும் அசுரர்களும் சலசல என்னும் சப்தம் தோன்றுமாறு திருப்பாற்கடலைக் கடைந்த போது, காலத்தை கொல்லும் ஆலகால விஷ‌ம் அக்கடலில் தோன்றியது, அப்போது தேவர்களும் அசுரர்களும் பயந்து நடுங்கித் தன்னை நோக்கி ஓலமிட்ட பொழுதில் அந்த நஞ்சை உண்டு அவர்களைக் காத்தருளியவனே, அழகிய மலை போன்ற மதில்களால் சூழப்பட்ட மறைவனத்தில் (வேதாரண்யத்தில்) எழுந்தருளிய பரமன் ஆவான்.

Meaning:
As the devas (demi-gods) and asuras (demons) using a snake as a rope and a hillock as a pestle noisily churned the great-ocean it produced a great poison. And when they became afraid and begged, you swallowed the poison and saved them. O Lord! thou are the one who resides in the Vedaraniam temple that is surrounded by walls that resemble small hills.

வேதாரண்யம் தாயுமானசாமி சோமசுந்தரம்
தலகாசி, ப்லாரிடா, அ.ஐ.நா.
திங்கள் கிழமை, டிசம்பர் 15, 2008.


திருஞானசம்பந்தரின் வேதாரண்யம் தேவாரம் [Narration in .mp3]


வடிவமும் உரிமையும் © 2008 தாயுமானசாமி சோமசுந்தரம்.