சோமசுந்தரம் குடும்பமும் தலகாசி தமிழ்ச் சங்கமும் [English Version]

வாரம் ஒரு தேவாரம்

http://tamil.somasundaram.us

தலம்: திருமறைக்காடு (வேதாரண்யம்)
பாடல்: தேவாரம்
பாடியவர்: சுந்தர மூர்த்தி நாயன்மார்
திருமுறை: 7; பதிகம்: 71; பாடல்: 01

யாழைப்பழித் தன்னமொழி மங்கைஒரு பங்கன்
பேழைச்சடை முடிமேற்பிறை வைத்தான்இடம் பேணில்
தாழைப்பொழில் ஊடேசென்று பூழைத்தலை நுழைந்து
வாழைக்கனி கூழைக்குரங்கு உண்ணும்மறைக் காடே

உரை: யாழையையும் பழிக்க கூடியளவு குரலை உடைய உமையை (பார்வதியை) ஒரு பாதியாகக் கொண்டவனே! பேழையைப் போல சடை (தலை) முடியில் பிறையைச் (சந்திரனை) சூடியவனே! தாழம் புதருக்குள் புகுந்து புழைகளில் நுழைந்து வாழைப் பழம் உண்ணும் குரங்குகள் (காடு சுழ்ந்த ஊர்) உள்ள திருமறைக்காட்டில் (வேதாரண்யத்தில்) உறையும் இறைவன் நீயே!

Meaning:
O Lord! you are the one who shares half of you with Parvathi who has a voice that is sweeter than music from Yazh! You are the one who wears the crescent moon on your head gear! You are the one who resides in Vedaraniam where monkeys go around the thazham bushes and eat the banana fruits.

வேதாரண்யம் தாயுமானசாமி சோமசுந்தரம்
தலகாசி, ப்லாரிடா, அ.ஐ.நா.
திங்கள் கிழமை, டிசம்பர் 22, 2008.


சுந்தரரின் வேதாரண்யம் தேவாரம் [Narration in .mp3]


வடிவமும் உரிமையும் © 2008 தாயுமானசாமி சோமசுந்தரம்.