சோமசுந்தரம் குடும்பமும் தலகாசி தமிழ்ச் சங்கமும் [English Version]

வாரம் ஒரு தேவாரம்

http://tamil.somasundaram.us

தேவாரம் | தெய்வ அன்பு | Thevaaram | Love of God

திருச்சிற்றம்பலம்

தேவாரம் என்பது பன்னிரெண்டு சைவத் திருமுறைகளில் ஒன்று முதல் ஏழு வரையிலானது. முதல் மூன்று திருமுறைகளை இயற்றியவர் திருஞான சம்பந்த சுவாமிகள் (சம்பந்தர்). நான்கு தொடங்கி ஆறு வரை உள்ள திருமுறைகளை இயற்றியவர் திருநாவுக் கரசு சுவாமிகள் (அப்பர்). ஏழாவது திருமுறையை இயற்றியவர் சுந்தரர் சுந்தர மூர்த்தி நாயன்மார் (சுந்தரர்).

திருஞான சம்பந்தரும் (கி.பி 630 - 650) திருநாவுக் கரசரும் சம காலத்தவர்கள், ஆனால் சுந்தரர் வாழ்ந்த காலம் பின்னர் (கி. பி ). ஏழு திருமுறைகளையும் பண் வாரியாக தொகுத்து அளிப்பதற்கு பண் முறை தொகுப்பு என்று பெயர். பாடல் பெற்ற தலங்களின் திருமுறைகளாக தொகுத்து அளிப்பதற்கு அடங்கல் முறை தொகுப்பு என்று பெயர். பாடியவர்களின் திருமுறைகளை தனியாக தொகுத்து அளிப்பதற்கு தலமுறை தொகுப்பு என்று பெயர்.

திருஞான சம்பந்தர் பிராமண குலத்தவர். தந்தை பெயர் சிவபாத இருதயர், தாய் பெயர் பகவதியார். பிறந்த ஊர் சீர்காழி. திருநாவுக் கரசர் வேளாளர் குலத்தவர், எண்பது ஆண்டுகாலம் வாழ்ந்தவர். முதலில் சமணராக இருந்து பின்னர் சைவராக மாறியவர். வாழ்ந்த ஊர் காஞ்சிபுரம். சுந்தரர் சைவ பிராமண குலத்தவர்.

திருச்சிற்றம்பலம்

மேலும் > >

வேதாரண்யம் தாயுமானசாமி சோமசுந்தரம் | தலகாரசி, புலாரிடா, அ.ஐ.நா. | டிசம்பர் 01, 2008.

வடிவமும் உரிமையும் © 2008 தாயுமானசாமி சோமசுந்தரம்.