![]() |
|||
![]() |
|||
|
|||
![]() |
|||
|
தலகாசி தமிழ்ச் சங்கத்தின் கோலப் போட்டியும் பொங்கல் கோலகலமும் தாயுமானசாமி சோமசுந்தரம் சனிக்கிழமை, சனவரி 23, 2010; மாலை 6:00 மணி முதல் 9:30 மணி வரை முன்னாள் மாணவர் விடுதி கேளிக்கை கூடம், தலகாசி, ப்எல் 32310
பண்டை காலம் தொடங்கி வீட்டு வாசலில் காலையிலும் மாலையிலும் தண்ணீர் தெளித்து அரிசி மாவில் கோலம் போடுவது என்பது ஒரு தமிழ் மரபு. தமிழ் நாட்டில் குடும்ப பெண்களும் அவர்களின் குழந்தைகளும் வேவ்வேறு கோலம் போடுவது என்பது ஒரு தினசரி காட்சி. மார்கழி-தை மாதங்களில் இந்த பழக்கம் மேலும் வலுவாகி வண்ணக் கோலம் இடுவதும், பெரிய கோலம் போடுவதும் பறங்கி பூ வைப்பதும் மிக முக்கியமான அம்சமாகி விடுகிறது. தை மாதத்தில் கதிரவன் தெற்கில் இருந்து வடக்கு நோக்கி பயணத்தை தொடங்குவதை குறிப்பது தான் பொங்கல் பண்டிகையின் ஆரம்பம். தமிழ் நாட்டில் பொங்கல் பண்டிகையை நான்கு நாட்கள் கொண்டாடுவார்கள் (திருவள்ளுவர் தினம், பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல்). அரிசி மாவில் கோலம் போடுவதற்கு காரணம், எறும்பு, குருவி, காகம் போன்ற சிறு உயிரினங்கள் அந்த உணவை உண்டு வாழும் போது தமிழர்கள் அதிலும் விவசாயிகளுக்கு ஒர் சந்தோஷம். அவர்கள் கடினமாக உழைத்து கிடைத்த சாகுபடியில் ஒரு சிறு பகுதியை பங்காக கொடுப்பது தான் முறை அல்லவா! வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் தாய்நாட்டையும், தமிழகத்தையும், குடும்பத்தையும் விட்டு விட்டு இருப்பதால் சந்தர்ப்பம் கிடைக்கும் போதல்லாம் தமிழ் நாட்டு பண்டிகைகளையும் பழக்கங்களையும் கொண்டாட ஆசை படுவதை அனைவரும் உணரலாம். கடந்த 10 ஆண்டு காலமாக தலகாசியில் திரு முத்துசாமி குடும்பமும் எங்கள் (சோமசுந்தரம்) குடும்பமும் தமிழர் பண்டிகைகளை கொண்டாட வாய்ப்புக்களை உற்பத்தி கொடுத்துக் கொண்டு வருகிறோம். அதை தொடங்கி இந்த வருடம் பொங்கல் விழாவின் போது கோலப் போட்டியும் வைக்கலாம் என்று நினைத்தோம். இதற்கு காரணம், சென்ற வருட பொங்கல் விழாவே! அப்போழுது தான் வீட்டின் உள்ளே கோலம் போடத் தேவையான பொருட்க்களை வாங்க முடிந்தது.
|