சோமசுந்தரத்தின் பக்கங்கள் [English Version]

2004 தமிழ்ப் புது வருட விழா | Tamil New Year Celebration

Dr. M. Subbuswamy's Residence | Saturday, April 17, 5:00 PM | Tallahassee, Florida, USA.

2004 தமிழ்ப் புது வருடப் பிறப்பிற்காக நடத்திய விழாவில் திருமதி உஷா தமிழ் சொல்லிக் கொடுத்த குழந்தைகள் ஒப்பிவித்த பாடல்கள் இரண்டு: அம்மா இங்கே வா வா! மற்றும் ஒன்று இரண்டு மூணு நாலு. Prof Usha Chandra taught Tamil to children of Tallahassee and the kids performed the following Tamil songs they learned in the class for the 2004 Tamil New Year Celebration.

 

அம்மா இங்கே வா வா பாட்டு

அம்மா இங்கே வா வா! ஆசை முத்தம் தா தா!
இலையில் சோறு போட்டு ஈயைத் தூர ஓட்டு.
உன்னைப் போல நல்லார் ஊரில் யாவர் உள்ளார்?
என்னால் உனக்குத் தொல்லை ஏதும் இங்கே இல்லை.
ஐயம் இன்றிச் சொல்வேன் ஒற்றுமை என்றும் பலமாம்
ஓதும் செயலே நலமாம் ஔவை சொன்ன மொழியாம்
அஃதே எனக்கு வழியாம்.

ஒண்ணு ரெண்டு மூணு நாலு பாட்டு

ஒண்ணு ரெண்டு மூணு நாலு அஞ்சு ஆறு
உங்க ஊரு எந்த ஊரு? என்ன பேரு?
ஏழு எட்டு ஒன்பது ... ... பத்து
எங்க ஊரு நல்ல ஊரு வந்து பாரு !

மற்ற பக்கங்கள்

மேலும் > >

வடிவமும் உரிமையும் © 2008-09 தாயுமானசாமி சோமசுந்தரம்.